மஷ்ரூம் ஸ்பெஷல் மசாலா தோசை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்..
தேவையான பொருட்கள்:
தக்காளி
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மசித்த உருளைக்கிழங்கு
உப்பு
மிளகாய்த்தூள்
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய மஷ்ரூம்
சீரகம்
சோம்பு
பட்டை
கறிவேப்பிலை
தோசை மாவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் நறுக்கி வைத்த மஷ்ரூமை சேர்த்து நன்றாக கிளறவும். மஷ்ரூரூம் ஓரளவுக்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும். அவ்ளோதாங்க மஷ்ரூம் மசாலா ரெடி.
பிறகு தவாவில் தோசை ஊற்றி அது பாதி வெந்ததும் அதன் மீது மஸ்ரூம் மசாலாவை வைத்து பரப்பி விடவும். பின்னர் தோசை முழுமையாக வெந்ததும் இருபக்கமும் மடித்து இறக்கவும். அவ்ளோதாங்க சுவையான மஷ்ரூம் ஸ்பெஷல் மசாலா தோசை ரெடி..!