முதல்முறையாக நண்டு சமைக்கிறீங்களா..? எப்படி சுத்தம் செய்வது தெரியலையா..? அப்போ இந்த பதிவைப் படியுங்க..
நண்டு சமைக்கிறதுக்கு முன்னாடி அதை எப்படி முழுமையாக சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்.
நண்டு சுத்தம் செய்யும் முறை:
முதலில் நண்டின் பின்புறத்தில் உள்ள ஓடை உடைத்து எடுக்கவும். பிறகு முன் பக்கத்தில் உள்ள ஓடையும் உடைத்து எடுக்கவும்.
நண்டின் 2 கொடுக்குகளையும் உடைக்கவும். பின்னர் நண்டின் உள்ளே நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும்.
இறுதியாக நண்டின் கால்களை ஒவ்வொன்றாக உடைத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. நண்டின் உடல் பாகம், கால் பாகங்களைக் கொண்டு நண்டு பிரை, நண்டு குழம்பு என வகை வகையாக சமைத்து சுவைக்க தயாரா..?