ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் கத்திரிக்காய் ஃபிரை எப்படி செய்றதுனு பார்க்கப்போறோம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்
எண்ணெய்
கடுகு
மிளகாய் தூள்
உப்பு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், நீள வடிவில் வெட்டி வைத்த கத்திரிக்காயை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்ணெய்யிலே கத்திரிக்காய் நன்று வேகும் வரை அவ்வபோது கிளறிவிடவும்.
அவ்ளோதாங்க.. ருசியான மற்றும் ஈசியா செய்யக்கூடிய கத்திரிக்காய் ஃபிரை ரெடி..!