தித்திப்பும், புளிப்பும் கலந்த மாங்காய் பச்சடி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாமா ?
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
வெல்லம் - அரை கப்
ஏலக்காய் - 5
கடுகு - 3/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில், பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாகவும், மாங்காயை துருவியும், வெல்லம் மற்றும் ஏலக்காயை பொடிச் செய்தும் தயாராக வைக்கவும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதில், அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அத்துடன், மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.
மாங்காய் வெந்ததும் பொடி செய்துள்ள வெல்லம் சேர்த்து அது கரையும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
இறுதியாக, ஏலக்காய்த் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வரை வேகவிட்டு இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மாங்காய் பச்சடி ரெடி..!