ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு ஈஸியா செய்யக்கூடிய ப்ரென்ச் பிரை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளை’கிழங்கு - 3
எண்ணெய்
உப்பு
செய்முறை:
உருளைக் கிழங்கின் தோலை சீவி, நான்கு பக்கமும் வெட்டிவிடவும். பிறகு, உருளைக்கிழங்கை சதுரமாகவும் பின்னர், பிரெஞ்ச் பிரை பதத்திற்கு நறுக்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 15 - 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
பிறகு, மற்றொரு பொளலில் சுடு தண்ணீரில் ஒரு மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சுமார் 5 - 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இதன் பிறகு, ஒரு டிஸ்சு பேப்பரில் போட்டு ஈரப்பதத்தை எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க டேஸ்ட்டி, கிரிஸ்பி ப்ரென்ச் பிரைய் ரெடி !