மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்மைலி சிப்ஸ்

Crispy Potato Smiley Chips recipe

by Isaivaani, Feb 27, 2019, 20:34 PM IST

குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு ஸ்மைலி சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

பிரட் க்ரம்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

மசித்து வைத்த உருளைக்கிழங்கை எடுத்து கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அத்துடன் பிரெட் சிரம்ப்ஸ், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து நன்றாக பிசைந்து மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், சப்பாத்தி போன்று பெரியதாக உருட்டி ஒரு சின்ன முடி எடுத்து மாவில் வட்டவட்டமாக அழுத்தவும்.

பிறகு ஒரு ஸ்ட்ரா எடுத்து ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு துளைகள் இடவும். அத்துடன், ஒரு ஸ்பூன் எடுத்து வாய் போன்று அழுத்தவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வட்டமான உருளைக்கிழங்கு மாவுத் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான ஸ்மைலி உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி..!

You'r reading மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்மைலி சிப்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை