சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு பருப்பு போடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.. அடடே என்ன ருசி என்பீர்கள்.. அந்த பருப்பு பொடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாமா..?
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
வர மிளகாய் - 20
மிளகு - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில், கொள்ளு போட்டு வறுத்து, அது ஆறியதும், தோல் நீக்கி மிக்ஸில் அரைத்து வைக்கவும்.
இதேபோல், மிளகாய் தொடர்ந்து, மிளகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.
உப்புடன், வறுத்து வைத்த பொருட்களை, ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து, அனைத்தையும் சல்லடையில் சலித்து எடுத்தால் பருப்பு பொடி ரெடி..!