வறுத்து அரைத்த சிக்கன் கறி-சூப்பர் ரெசிபி

by Isaivaani, Jan 29, 2018, 13:56 PM IST

வறுத்து அரைத்து செய்யப்படும் சுவையான சிக்கன் கறி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கி.கி (எலும்பில்லாதது)
தேங்காய் (துருவியது) – 1 கப்
இஞ்சி – 1’’ அளவு
பூண்டு – 6
பச்சை மிளகாய் – 6
தேங்காய் எண்ணெய்
சின்ன வெங்காயம் -1
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் தேங்காய் துருவலை வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும். கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதோடு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும். பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும். இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.

பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும். இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.

பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த மசாலா விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இப்போது சுவையான மணக்கும் சிக்கன் கறி ரெடி.

You'r reading வறுத்து அரைத்த சிக்கன் கறி-சூப்பர் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை