குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குட்டி குட்டி பிஸ்கட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான அளவு:
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மைதா - ஒன்றரை கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, நெய், உப்பு சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
பிறகு, இந்த மாவை நன்றாக உருட்டி பெரியதாக விரித்துக் கொள்ளவும்.
இதனை, துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொறு துண்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மைதா பிஸ்கட் ரெடி..!