குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகக்கூடிய ஹாட் சாக்லேட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கோகோ பவுடர் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கெட்டியான பால் - ஒரு கப்
பட்டைப் பொடி - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் ஊற்றவும். அதில், கோகோ பவுடர், சர்க்கரை, பட்டைப் பொடி சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் வைத்து கெட்டி இல்லாமல் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பிறகு, ஆறிய பாலை மீண்டும் சூடு செய்யவும். மற்றொரு அடுப்பில் கோகோ கலவையை சூடு செய்யவும்.
பால் சூடானதும் கொஞ்சம் கொஞ்மாக சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்றாக நுரைக்கும் வரை அடித்துக் கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ஹாட் சாக்லேட் தம்ளரில் ஊற்றி பரிமாறவும்.