காரசாரமான காராபூந்தி ரைத்தா எப்படி செய்றதுனு பார்ப்போம்..
தேவையான பொருட்கள் :
காராபூந்தி - கால் கப்
கெட்டியான தயிர் - ஒரு கப்
உப்பு - தேவைகேற்ப
வெங்கயம் - ஒன்று
சாட் மசாலா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
* பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* கடைசியாக காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி ஸ்பூன் வைத்து பரிமாறவும்.
* சூப்பரான காராபூந்தி ரைத்தா ரெடி.
* இது அனைத்து வகை சப்பாத்தி, பிரியாணி, மற்றும் புலாவ்களுக்கு பொருத்தமாக இருக்கும். காராபூந்தியை கடைசியாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.