மக்களே.. இன்னைக்கு நாம் சூப்பர் லன்ச் ரெசிபி கேரட் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - ஒரு கப்
வடித்த சாதம் - ஒரு கப்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - 10
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அத்துடன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கூடவே, மஞ்சள் தூள், கரம் மசாலா, துருவிய கேரட்,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கேரட் வெந்ததும், வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
கேரட் மசாலா நன்றாக சாதத்துடன் படும்படி கிளறி இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான கேரட் சாதம் ரெடி..!