மாலை நேர சூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு பணியாரம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு -1
வெங்காயம்- 1
இட்லி மாவு - 1கப்
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
இஞ்சி ( துருவியது) - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - மல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை துருவியால் துருவிக்கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, இட்லி மாவுடன் கலந்துகொள்ளவும்.
பின் அடுப்பில் குழிபணியாரக்கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்த உருளைக்கிழங்கை எடுத்து இட்லி மாவுடன் துவைத்து எடுத்து ஒவ்வொன்றாக பணியாரக்குழியில் வைத்து அதன் மீது கொஞ்சம் இட்லி மாவினை ஊற்ற வேகவிட்டு எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான உருளைக்கிழங்க்கு பணியாரம் ரெடி..!