வீட்டிலேயே சுவையான கீரை மஷ்ரூம் பிட்சா டோஸ்ட் எப்படி செய்றதுனு பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் 8
மஸ்ரூம் 100 கிராம்
நாட்டு பசலைக்கீரை அல்லது பாலக்கீரை ஒரு கட்டு
பீட்சா சாஸ் ஒரு கப்
துருவிய சீஸ் அரை கப்
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் நறுக்கி வைத்த கீரை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மஸ்ரூம் போட்டு வேகும் வரை வதக்கி கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதனை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி அதன்மீது பீட்சா சாஸ் தடவவும் பின்னர் அதன் மேல் கீரை மற்றும் சீஸ் வைத்து மூடி போட்டு மிதமான சூட்டில் விலகும் வரையில் டோஸ்ட் செய்து இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கீரை மஷ்ரூம் பிட்சா டோஸ்ட் ரெடி..!