வீட்டிலேயே சுவையான ஈவ்னிங் ஸ்னாக் மீல மேக்கர் கட்லெட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 100 கிராம்
வெங்காயம் - 2
வேக வைத்த உருளைக்கிழங்கு - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ரவை - 3 டீஸ்பூன்
ரஸ்க் பவுடர் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து எடுத்த மீல் மேக்கரை கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன், அரைத்து வைத்த மீல் மேக்கரையும் சேர்த்து கிளறி வேக வைக்கவும்.
இடையே, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
இந்த கலவை ஆறியதும், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசைந்து கட்லெட் வடிவத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
இதற்கிடையே, சோள மாவை தண்ணீர்விட்டு கலந்து வைக்கவும். கூடவே, ரவை, பிரெட் தூள் கலவையையும் தயாராக வைக்கவும்.
இந்நிலையில், தயாராகவுள்ள கட்லெட் துண்டுகளை சோள மாவில் முக்கி, பிறகு ரவை, பிரெட் தூள் கலவையில் பிரட்டி எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் கட்லெட் ரெடி..!