வீட்டிலேயே, அசத்தலான சுவையில் மஷ்ரூம் பட்டாணி சப்ஜி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 400 கிராம்
முந்திரி பருப்பு - 10
பட்டாணி - அரை கப்
தக்காளி - 3
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், மஷ்ரூமை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, பிறகு மிக்ஸி ஜாரில் தக்காளியுடன், முந்திரிப்பருப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னறிமானதும், தக்காளி, முந்திரி விழுதை சேர்த்து கிளறவும்.
கூடவே, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், பட்டடை சேர்த்து கிளறி வேகவிடவும். பட்டை ஓரளவுக்கு வெந்ததும், மஷ்ரூம் சேர்த்து கிளறவும்.
அத்துடன், ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து மிதமான தீயில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
இறுதியாக, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மஷ்ரூம் பட்டாணி சப்ஜி தயார்..!