உடலுக்கு நன்மைத் தரும் பாலக்கீரையைக் கொண்டு புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பாலக்கீரை - ஒன்றரை கப்
வெங்காயம் - ஒன்று
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
புதினா
சர்க்கரை - அரை டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய், கரம் மசாலா, பாலக் கீரை, உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு பொரிக்கவம்.
பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இடையே, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்த பாலக் கீரை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
நறுக்கிய கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், பாஸ்மதி அரிசி போட்டு கூடவே இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி குக்கர் மூடி போட்டு விசில்விட்டு வேகவிடவும்.
வெந்ததும், குக்கர் மூடியை திறந்து நெய், புதினா போட்டு மிதமாக கிளறி இறக்கினால் சுவையான பாலக்கீரை புலாவ் ரெடி..!