சுவையான பூசணிக்காய் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) & ஒரு கப்
பால் & 4 கப்
சர்க்கரை & அரை கப்
ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன்
முந்திரி & 10
உலர்ந்த திராட்சை & 10
குங்குமப்பூ & ஒரு சிட்டிகை
நெய் & 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்விட்டு உருக்கவும்.
பிறகு, துருவிய பூசணிக்காயை சேர்த்து கிளறி வேகவிடவும்.
தொடர்ந்து, பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
பாலுடன் பூசணிக்காய் சேர்த்து கொதித்ததும் மஞ்சள் நிறமாக மாறும்.
அப்போது, சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து பூசணிக்காய் வெந்து சிறிது கெட்டியாகும்வரை வேகவிடவும்.
இடையே, வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து கலவையில் கொட்டி தாளிக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பூசணிக்காய் பாயாசம் ரெடி..!