குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் (சீவியது) - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 5
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் தோசை மாவை தயாராக வைக்கவும்.
மிக்ஸி ஜாரில், பூண்டு, மிளகாய்த்தூள், நறுக்கி வைத்த பீட்ரூட் 5 கரண்டி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
இதனை தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து, சூடானதும் தோசை வார்த்து அதன்மீது நல்லெண்ணெய்விட்டு சுட்டெடுத்தால் சுவையான பீட்ரூட் தோசை ரெடி..!