ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரையைக் கொண்டு துவையல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 5
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
தேங்காய் எண்ணெய்
உப்பு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து வதக்கிய பின்னர், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
வல்லாரைக் கீரையை எண்ணெய் ஊற்றி கடாயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மிதமான பதத்தில் அரைத்து தாளிக்கவும்.
சுவையான ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல் இதோ..!