வித்தியாசமான சுவையில் பாலக் பன்னீர் மோமோஸ் ரெசிபி

Tasty Palak Paneer Momos Recipe

Aug 2, 2019, 22:11 PM IST

வீட்டிலேயே சுவையான பாலக் பன்னீர் மோமோஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை - ஒரு கப்

மைதா - ஒன்றரை கப்

பன்னீர் (துருவியது) - ஒரு கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

Ñஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கிண்ணத்தில் மைதா மாவு போட்டு, பாலக் கீரை விழுது, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் விடவும்.

வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்ததாக, இஞ்சி பூண்டு விழுது, மிளகாயத்தூள் சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கவும்.

தொடர்ந்து, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

பின்னர், மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து சிறிய பூரி வடிவில் வார்க்கவும்.

நடுவில், பன்னீர் மசாலாவை வைத்து விரும்பிய வடிவில் மடித்துக் கொள்ளவும்.
இதனை, இட்லி குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

சுவையான பாலக் பன்னீர் மோமோஸ் ரெடி..!

You'r reading வித்தியாசமான சுவையில் பாலக் பன்னீர் மோமோஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை