மிஸ் பண்ணாதீங்க.. தந்தூரி காளான் ரெசிபி

Share Tweet Whatsapp

சுவையான தந்தூரி காளான் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

காளான் - 100 கிராம்

தயிர் - 6 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

பின்னர், சுத்தம் செய்த முழு காளானையும் மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து சுமார் 20 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

பின்னர், பெரிய குச்சியில் ஒவ்வொரு மஷ்ரூமையும் குத்தி சொருகவும்.

வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய்விட்டு இந்த மஷ்ரூமை வைத்து தந்தூரி முறையில் அனைத்து பக்கமும் சுட்டு வேகவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான தந்தூரி காளான் ரெடி..!


Leave a reply