சுவையான தேங்காய் அடை ரெசிபி

Aug 6, 2019, 22:58 PM IST

சுவையான தேங்காய் அடை சுலபமா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சரிசி அரிசி - ஒரு கப்

தேங்காய் - அரை கப்

உப்பு

செய்முறை:

முதலில் கால் கப் பச்சரிசியை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அரிசி மாவை சேர்த்து கூழ் போன்று காய்ச்சவும். (கிளறிக் கொண்டே இருக்கவும்..)

மீதமுள்ள அரிசியுடன், தேங்காய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கூழ் கலவை ஆறியதும், அதனுடன் அரைத்த தேங்காய் கலவையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு பரிமாறவும்.

சுவையான தேங்காய் அடை ரெசி..!


More Ruchi corner News

அதிகம் படித்தவை