குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய கடலை மாவு பர்பி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
முந்திரி - 10
பாதாம் - 10
பிஸ்தா - 10
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
நெய் - அரை கப்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கடலை மாவை கொட்டி வறுத்துக் கொள்ளவும்.
பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கரைத்து கம்பி பதத்திற்கு பாகு தயார் செய்யவும்.
இதனை, கடலை மாவு கலவையில் சேர்த்துக் கிளறி அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும். இதனை ஒரு பேனில் கொட்டி சமம் செய்யவும்.
அதன் மீது, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி அழுத்தம் கொடுத்து பின்னர் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
சுவையான கடலை மாவு பர்பி ரெடி..!