அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் மாக்ரோனி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
மாக்ரோனி - ஒரு கப்
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10
பச்சை மிளகாய் - 1
குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் துகள் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு, உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மாக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பின்னர், சிக்கன் துண்டுகள், மாக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும்.
சுடச்சுட சிக்கன் மாக்ரோனி ரெடி..!