சுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி

Tasty Sweet Rava Puttu Recipe

Aug 9, 2019, 20:45 PM IST

சுலபமாக செய்யக்கூடிய சூப்பர் ஸ்னாக் ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - ஒரு கப்

முந்திரி பருப்பு - 10

உலர் திராட்சை - 10

நெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

இதனை மீண்டும், கொதிக்க வைத்து சிரப் பதத்திற்கு தயாரிக்கவும்.
கடாயில் நெய்விட்டு சூடானதும் உலர் திராட்சை, முந்திரி சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் ரவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஒரு கிண்ணத்தில் கொட்டவும்.

அத்துடன், ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்த்தூள், சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து மிக்சி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டவும்.

இதனை இட்லி குக்கரில் தட்டு போட்டு அதன் மீது கொட்டி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.

பின்னர், இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு அத்துடன் வெல்லப் பாகு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இறுதியாக, வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கலந்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெடி..!

You'r reading சுவையான ஸ்வீட் ரவை புட்டு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அதிகம் படித்தவை