வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி

Aug 16, 2019, 00:05 AM IST

சுவையான வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 2 கைப்பிடி

கோதுமை மாவு - 200 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று

பூண்டு - 5

சீரகம் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்

மிளகாய்த்தூள்

வெண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை வெந்ததும், கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

மேலும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அளவிற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் விடவும்.

பின்னர் சிறிய துண்டுகளாக எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரித்து, தவாவில் வெண்ணைவிட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி ரெடி..!


More Ruchi corner News