சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி

Aug 17, 2019, 22:23 PM IST

உடலுக்கு சத்துத் தரும் முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - ஒரு கப்

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - ஒரு பிடி

புதினா - ஒரு பிடி

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் பாசிப் பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஓர் இரவு முழுவதும் ஊற விடவும்.

பிறகு, அதனை வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் போட்டு கட்டி சுமார் 8 மணி நேரம் விடவும். அப்படி செய்யும்பபோது பாசிப்பருப்பு முளைத்திருக்கும்.

இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, அத்துடன் கேரட், வெங்காயம், கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

அவ்ளோதாங்க.. முளைகட்டிய பச்சை பயறு சாலட் ரெடி..!

இரட்டிப்பு மடங்கு சத்து நிறைந்த இந்த சாலட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது..


More Ruchi corner News