யம்மியான சிக்கன் சான்விச் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (வேக வைத்து, கொத்தியது) தக்காளி சாஸ் - தேவையான அளவு வெண்ணெய் - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 1 பிரட் - 6 துண்டுகள்
உணவு செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பின் சிக்கனை வேகவைத்து மிக்சியில் போட்டு துருவியது போன்று செய்து கொள்ளவேண்டும்
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி பின் கொத்திய சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன்மேல் தக்காளி சாஸ் தடவி, பின் ஒரு பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, வெண்ணெய் தடவிய மற்றொரு பிரட்டை வைத்து மூட பரிமாறலாம்.