தினமும் ஒரே மாதிரி சமைத்து போர் அடித்திருக்கும். புதிதாக என்ன சமைப்பது என யோசிக்கும் மங்கயர்கட்கு இதோ முருங்கை தேங்காய் பால் குழம்பு .
எப்படி செய்வது:
முருங்கைக்காய் - மூன்று
பெரிய வெங்காயம் - நான்கு
தக்காளி (பெரியது) - மூன்று
பச்சை மிளகாய் - ஐந்து
பூண்டு - ஐந்து பல்லு
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
கடலை எண்ணெய், நைஸ் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதை தனியாக கப்பிலேடுது வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து எப்போதும் போல் வதக்கவும்.
இந்த கலவையில் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் நன்றாக பிரட்டவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிமிழில் நான்கு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி வைக்கவும்.. முருங்கை தேங்காய் பால் குழம்பு ரெடி..