சுவையான ரவை பாயாசம் ரெடிஓணம் பண்டிகை ஸ்பெஷல்

how to make ravai kheer in tamil

by Logeswari, Aug 31, 2020, 21:16 PM IST

பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயாசத்தை செய்வார்கள்.அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள்.பண்டிகை நேரத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மிக விரைவில் செய்து முடிக்ககூடிய ரெசிபி பாயாசம்.விருந்தினர்கள் வீட்டிற்கு வருகை தந்தாலும் முதன்மையாக பாயாச உணவு கண்டிப்பாக இடம்பெறும்.இப்பாயசத்தில் ரவை சேர்ப்பதால் சற்று க்ரிமியாக நாவினை சுவையால் கட்டி இழுக்கும்.அது மட்டும் இல்லாமல் ரவை பாயாசத்தின் சுவை நாவினிலே குடிபெயர்ந்து கொள்ளும். இன்று ஓணம் பண்டிகை என்பதால் இந்த பாயாசத்தை ஸ்பெஷலாக செய்து சுவையாக பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

ரவை-3/4 கப்

ஏலக்காய் பொடி-2ஸ்பூன்

நெய்-2 ஸ்பூன்

முந்திரி-8-10

உலர்ந்த திராட்சை-11-12

பால்-1/2 கப்

தண்ணீர்-4-5 கப்

சர்க்கரை-தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கடாயில் நெய் ஊற்றவும்.நெய் காய்ந்தவுடன் அதில் முந்திரி,உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக ஒரு கப்பில் வைக்க வேண்டும்.

அதே கடாயில் ரவையை சேர்த்து இதமான சூட்டில் வறுக்க வேண்டும்.

பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர்,பாயாசத்திற்கு முக்கிய தேவையான பாலை சேர்த்து நன்றாக கிளறவும்.

மிதமான தீயில் 4-5 நிமிடம் கொதித்த பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.

கடைசியில் நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை ஆகியவை சேர்த்து அடுப்பை அனைத்து விட வேண்டும்.

சூடான,சுவையான,இனிப்பான ரவை பாயாசம் தயார்.

You'r reading சுவையான ரவை பாயாசம் ரெடிஓணம் பண்டிகை ஸ்பெஷல் Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை