பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் சிக்கன் கைமா ரொட்டி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
தேவையான பொருட்கள்
1. சிக்கன் - கால் கிலோ
2. கோதுமை மாவு - 200 கிராம்
3. மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
4. கரம் மசாலா தூள் - அரை டேபிள் ஸ்பூன்
5. தக்காளி சாஸ் - அரை டீஸ்பூன்
6. சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
7. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
8. எண்ணெய் - தேவைக்கேற்ப
9. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வெட்டி வைத்த சிக்கனுடன், சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், வேக வைத்த சிக்கன், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
* பின்பு அதனுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
* பிசைந்த மாவை எழுமிச்சையளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.. சிக்கன் கைமா ரொட்டி தயார்.