ருசியான பட்டர் சிக்கன் ரெசிபி இதோ உங்களுக்காக..

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதிலும் பட்டர் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மனம் ஏங்கும். அப்படி ஒரு ருசியான பட்டர் சிக்கன் ரெசிபி எப்படி செய்றது என்று பார்ப்போமா..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது) 
பூண்டு  - 3 
பல்லாரி - 2
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 5
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 10 இலைகள்
மல்லித்தழை - 1 கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்ணீரை வற்ற விடவும். சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும். கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.

வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும். வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 

அவ்வளவு தான் ருசியான பட்டர் சிக்கன் ரெடி..

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :