மொறுமொறுப்பான வெஜிடபிள் பப்ஸ் ரெசிபி..!

May 3, 2018, 14:14 PM IST

மாலை நேர ஸ்னாக்ஸ் அல்லது வீட்டுக்கு திடீரென விருந்தாளி வந்துட்டாலோ கவலையே படாதீங்க.. உங்க கையாள மொறுமொறுப்பான வெஜிடபிள் பப்ஸ் செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க.. சரி இப்போ வெஜிட்டபிள்ஸ் பப்ஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

பப்ஸ் பேஸ்ட்ரி சீட் ( Puff Pastry Sheet ) – 1 பாக்ஸ்

பப்ஸ் மசாலா செய்வதற்கு:

உருளைக்கிழங்கு – 2 (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)

பெரிய வெங்காயம் – 1 /4 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

பட்டாணி – 1 /4 கப்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 / 2 தேக்கரண்டி

சீரக தூள் – 1 /4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்

செய்முறை:

பப்ஸ் பேஸ்ட்ரி சீட்டை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ரூம் டெம்ப்பரேசரில் 40 நிமிடங்கள் வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கி 5 – 10 நிமிடங்கள் வேக விடவும்.பின்னர் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைக்கவும்.அவனை 400 F இல் முன்சூடு செய்யவும்.பஃப் பேஸ்ட்ரி சீட்டை இரண்டு சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்(தங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளலாம்).

1 மேசைக்கரண்டி மசாலா எடுத்து பஃப் பேஸ்ட்ரி சீட்டில் வைத்து சதுர வடிவில் மடிக்கவும்.
போர்க் உபயோகபடுத்தி பஃப் ஓரங்களை அமுக்கி விடவும்(பார்ப்பதற்கு அழகாக இருக்கும்).

பப்ஸ் பொன்னிறமான கலரில் வருவதற்கு ஒரு முட்டையை ஒரு மேசைகரண்டி தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இந்த முட்டை கலவையை பஃப் இன் மேல் பாகத்தில் தடவி பேகிங் பேனில் வைக்கவும்.

இந்த பேகிங் பேனை முன் சூடு செய்த அவனில் 15 – 20 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். மொறுமொறுப்பான வெஜிடபிள் பப்ஸ் தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மொறுமொறுப்பான வெஜிடபிள் பப்ஸ் ரெசிபி..! Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை