மாலை நேரம் ரொம்ப போர் அடிக்குது.. ஏதாவது கொரிக்கணும் போல இருக்கா. உங்களுக்காகவே இதோ வேர்க்கடை பாக்கோட ரெசிபி. எளிதாக செய்யக்கூடிய பக்கோடா எப்படி செய்றதுன்னு பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது (விருப்பப் பட்டால்) - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தண்ணீர் தெளித்து பிசிறவும். பிறகு, காய்ந்த எண் ணெயில் உதிர்த்துப் போட்டு பொரிக் கவும்.
பின்னர், சிறிதளவு கறிவேப் பிலையை பொரித்து எடுத்து கலக்கவும். மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா ரெசிபி தயார்.