உங்களுக்கு அசைவம்னா புடிக்குமா ? அதிலும் சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்குமா ? அப்போ இன்னிக்கு உங்களுக்காக ஒரு சிக்கன் ரெசிபி.. தயிர் சிக்கன் கிரேவி ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்..
தேவையான பொருள்கள்:
சிக்கன் -1/4 கிலோ
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு -1
டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- 1டேபிள்
ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2
டீஸ்பூன்
உப்பு- தேவையான
அளவு
அரைக்க:
பூண்டு- 6 பெரியபல்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 10
சோம்பு - 1 டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.
சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.
சுமார் 10 - 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும். அவ்ளோ தான் உங்களுக்கான தயிர் சிக்கன் கிரேவி தயார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com