சுவையான இறால் பிரியாணி...
தேவையான பொருள்கள்:
இறால் கால் கிலோ
வெங்காயம் 3
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப
பட்டை, கிராம்பு, 2 துண்டுகள்
பிரிஞ்சி இலை 2
சோம்பு 3 பேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்
ஊறவைத்த அரிசி 4 கப்
செய்முறை:
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி-பூண்டு விழுதை தயார் செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து பொன்நிறமாக மாறிய பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியபின்னர், மஞ்கள், மிளகாய்த்தூள் தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுதுதையும் கொத்தமல்லித் தழையையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியபின்னர், சுத்தம் செய்த இறாலை அதனுடன் சேர்த்து வதக்கி, 5 நிமிடம் கழித்து அரிசியை சேர்த்து கிளறவும். பின்னர், அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான இறால் பிரியாணியின் மணம் மனதை சுண்டி இழுக்கும். அப்புறம் என்ன சாப்பிட வேண்டியதுதானே!