நூடுல்ஸ் சாப்டுருப்பிங்க.. அது என்ன நூடுல்ஸ் சூப் ?.. ஆமாங்க வித்தியாசமா நூடுல்ஸ் சூப் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையானப் பொருட்கள்:
நூடுல்ஸ் - 2 கப்
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கேரட், குடமிளகாயை சேர்த்து முக்கால் பதத்தில் வதக்கி வேக விட வேண்டும். பின் தண்ணீர் 3 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும்.
பிறகு காய்கறிகள் வெந்த பின் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். கடைசியாக சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள், தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின் மிளகுத்தூள் தூவி பரிமாறினால், சத்தான மற்றும் ருசியான நூடுல்ஸ் சூப் ரெடி !