ஸ்மார்ட் போன் என்ற ஒன்று வந்த பிறகு போன் நம்பர் முதல் அனைத்துமே அதில் சேமித்து வைத்துவிடுகிறோம். இதனால் நம் மூளையின் செயல்பாடு குறைந்து ஞாபக மறதி அதிகரித்துவிடுகிறது. இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. நாம் இன்னைக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி எப்படி செய்றதுன்னு பார்க்கப்போறோம்..
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை – அரை கட்டு
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
மிளகு – கால் டீஸ்பூன்
புளி – ஒரு கோலி குண்டு அளவு
வெல்லம் – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
கடுகு – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை:
கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.
அவ்ளோதாங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..!