நவராத்திரி என்றாலே பத்துநாட்கள் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அம்மனுக்கு நெய்வேத்யம் படைத்து வணங்குதல் இயல்பு. இம்முறை கொஞ்சம் புதுமையாக அன்னாசிப் பழ கேசரியைப் படைத்து அம்மனை வணங்குவோம் அவள் அருளைப் பெறுவோம்.
தேவையான பொருட்கள் :
அன்னாசி - 1/2 பழம்
ரவை - 1 கப்
நெய் - 3/4 கப்
முந்திரி - 10
கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
பைனாப்பிள் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அன்னாசிப்பழத்தின் தோலை நீக்கி நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் நெய்யில் பாதியை ஊற்றி, முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, அதில் கேசரி பவுடரை சேர்த்து, வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு நன்கு வேகும் வரை கிளறவும். பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து கட்டியில்லாமல் சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பைனாப்பிள் எசென்ஸ், நெய் போன்றவற்றை சேர்த்து, நன்கு கிளறி இறக்கி விடவும்.
இப்போது அன்னாசிப் பழ கேசரி தயார்.