பொங்கலுக்கு வகை வகையான பொங்கல் செய்ய ரெடியா..
தைத் திருநாளின் முதல் நாளான பெரும் பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே இனிப்பு பொங்கல் தான். வருஷம் வருஷம் இனிப்பு பொங்கல் தானே செய்றோம். இந்த வருஷம் பொங்கலுக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துவோம். ரெடியா..?
இப்போ பால் பொங்கல் எப்படி செய்றதுனு பார்ப்போம் செய்ய ரெடியா ?
தேவையானவை:
பச்சரிசி _ ஒரு கப்
பால் _ 1/4 கப்
வெல்லம்_சிறு துண்டு
செய்முறை:
ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும். அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் இறக்கவும்.
சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.