கொங்கு மண்டலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு..

Advertisement

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் கடலூர் மாவட்டங்களில்தான் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் புதிதாக 5688 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (அக்.1) 5595 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 8885 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5603 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 52,938 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 67 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9653 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1278 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 157 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 70,025 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 396 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 255 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 36,358 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32,822 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 495 பேருக்கும், சேலத்தில் 355 பேருக்கும், திருப்பூரில் 149 பேருக்கும், நாமக்கல் 163, தஞ்சாவூர் 226, திருவாரூர் 149, திருவண்ணாமலை 120, கடலூர் 166, வேலூர் 129 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னை, கோவை, சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிக்கிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் இது வரை 73 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

READ MORE ABOUT :

/body>