சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கான கோரிக்கைகள்குறித்து சென்னையில் நடந்த தொழிலாளர் வாரிய அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஐந்து சுங்கச்சாவடிகள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகிறது.
சேலம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை ரிலையன்ஸ் நிர்வாகம் நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் நிர்வாகம் தமிழகத்தில் 8க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை நடத்தி வருகின்றது. அதில் அனைத்து சுங்கச் சாவடிக்கும் ஜனவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.
நத்தக்கரை மற்றும் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும்,ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.இதன் காரணமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அந்த சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுங்கக் கட்டணம் இல்லாமல் இலவசமாகச் செல்கின்றது. நாமக்கல் கிருஷ்ணகிரி மேட்டுப்பட்டி தலைவாசல் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளிலும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளதால் புறக்கணித்து வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகிறது.