6000 mAh பேட்டரி டூயல் ரியர் காமிரா... இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 போன் அறிமுகம்

by SAM ASIR, Feb 11, 2021, 18:48 PM IST

6000 mAh திறன் மின்கலம், 4 ஜி VoLTE. வைஃபை மற்றும் புளூடூத் வி5.0 ஆகிய தொடர்பு வசதிகளுடன் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. உலக அளவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இப்போனின் இந்தியாவுக்கான வடிவம் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 போனை தொடர்ந்து இது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்

சிம் : இரட்டை நானோ சிம்
தொடுதிரை : 6.82 அங்குலம் எச்டி+: பிரைட்நஸ் 440 nits
இயக்கவேகம் : 2 ஜிபி
சேமிப்பளவு : 32 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூட்டலாம்)
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா : 13 எம்பி ஏஐ டூயல் ரியர் காமிராக்கள்
பிராசஸர் : ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 SoC
மின்கலம் : 6000 mAh

இதன் ஸ்டாண்ட்பை நேரம் 50 நாள்கள் என்று நிறுவனம் கூறுகிறது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.7,199/- விலையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

You'r reading 6000 mAh பேட்டரி டூயல் ரியர் காமிரா... இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 போன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை