சுவையான முந்திரி புலாவ் ரெசிபி அசத்தலா செய்து குடும்பத்தினருக்கு சுடச்சுட பரிமாறுங்க...
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 250 மி.லி
வெங்காயம் - 2
பட்டை
பிரியாணி இலை
நட்சத்திரப்பூ
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
இஞ்சி பூண்டு விழுது & அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
முந்திரி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
நெய் - 3 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
முதலில், பாஸ்மதி அரிசியை தண்ணீரில் சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
குக்கரில் நெய்விட்டு உருகியதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, நட்சத்திரப்பூ, சீரகம் சேர்த்து பொரிக்கவும். கூடவே, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தெடர்ந்து, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
தற்போது, கழுவி சுத்தம் செய்த பாஸ்மதி அரிசி, ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடிபோட்டு இரண்டு விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேகவிடவும்.
ஆவி அடங்கியதும், மூடியை திறந்து மிதமாக கிளறிவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முந்திரி புலாவ் ரெடி..!