வெள்ளை சாதத்திற்கு ஏற்ற முருங்கைக்காய் கார குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
வேர்கடலை - ஒரு கைப்பிடி
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வேர்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பூண்டு - 5
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் முருங்கைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.
பிறகு, வேகவைத்த முருங்கைக்காயை தண்ணீருடன் இதில் சேர்த்து கிளறவும்.
இடையே, வறுத்த வேர்கடலையை பொடித்து குழம்புடன் சேர்த்து கிளறவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான முருங்கைக்காய் கார குழம்பு ரெடி..!