சுவையான கோதுமை குலாப் ஜாமூன் ரெசிபி

Delicious Wheat Gulab Jamun Recipe

by Isaivaani, Jul 16, 2019, 15:30 PM IST

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - அரை கப்

பால் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

ஏலத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய்

நெய்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, 2 கப் தண்ணீர், குங்குமப்பூ, அரை டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து பால், ஏலத்தூள், நெய் சேர்த்து கலந்துவிடவும்.

பால் கொதிவந்ததும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

கோதுமை மாவு வேக வேக கெட்டியாகும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் கையில் நெய் தடவி நன்றாக பிசைந்து உருண்டைகள் தயார் செய்துக் கொள்ளவும்.

இந்த உருண்டைகளை தட்டி, அதன்மீது வடிவங்களை பொருத்திக் கொள்ளலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டைகளாகவிட்டு பொன்னிறமாக பொருத்திக் கொள்ளவும்.

பிறகு, பொரித்த உருண்டைகளை சர்க்கரை ஜீராவில் போட்டு ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்.

சுவையான கோதுமை குலாம் ஜாமூன் ரெடி..!

அட்டகாசமான சுவையில் மசாலா சப்பாத்தி ரெசிபி

You'r reading சுவையான கோதுமை குலாப் ஜாமூன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை