ஒரு அரசாங்கம் இப்படி இருக்க வேண்டும்: ஹஜ் மானியம் ரத்துக்கு விஜயகாந்த் கண்டனம்

ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலைபொருந்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Jan 17, 2018, 19:48 PM IST

ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலைபொருந்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வருடம் தோறும் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கமான ஒன்று. இதற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கிவந்தது.

ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியத்தை திடீர் என்று நேற்று (ஜன.16.2018) முதல் ரத்து செய்ததை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலைபொருந்தும். அரசாங்கம் வழங்கும் மானியம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக வழங்கவேண்டும்.

மதங்களை பார்த்து மானியத்தை வழங்குவதை தேமுதிக என்றைக்கும் வரவேற்காது. பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்து செய்துள்ளதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ஒரு அரசாங்கம் இப்படி இருக்க வேண்டும்: ஹஜ் மானியம் ரத்துக்கு விஜயகாந்த் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை