எப்பத்தான் பணம் தருவீங்க? ஓயாத சசிகலா புஷ்பா- திருச்சி சிவா சண்டை! இன்னொரு ஏர்போர்ட் பளார் காத்திருக்கு?

2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா.

சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் முறையாக வென்று முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெ,வுக்கு சசிகலா புஷ்பா வடிவில் ஏழரை சனி வந்து சேர்ந்தது. சசிகலா புஷ்பா தன்னை கன்னத்தில் அறைந்ததை திருச்சி சிவாவும் ஒப்புக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சசிகலா புஷ்பா மற்றும் திருச்சி சிவா ஆகிய இரு மாநிலங்களவை உறுப்பினர்களும், தங்கள் கட்சியின் தலைமை முன்பாக விளக்கம் அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்தநிலையில், மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா பேசுகையில், ''நடந்த சம்பவத்துக்கு திருச்சி சிவாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அரசு எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவியியிலிருந்து விலக நிர்பந்திக்கப்படுகிறேன். என் தலைவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார்' எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பணரீதியான விஷயம்தான் தாக்குதல் சம்பவத்துக்கு மூல காரணமாக இருந்தது. இதன்பிறகு சிவாவிடம் இருந்து தனக்கு வர வேண்டிய 4.5 கோடி ரூபாய் பணம் வந்து சேரும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் சசிகலா புஷ்பா.

இரண்டரை ஆண்டுகள் கடந்தும் சிவாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. இதைப் பற்றி விசாரித்தபோது, ' தன்னிடம் நட்பாகப் பேச விரும்புகிறவர்கள் அனைவரிடமும் பணம் கேட்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சிவா. ஊரெல்லாம் கடன் வாங்குவதுதான் அவரது வேலை. அவ்வளவு எளிதாக பணத்தைத் திருப்பித் தர மாட்டார்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபத்தில் இருக்கும் புஷ்பா, தன்னுடைய ஆட்களை அனுப்பி பணம் கேட்டு வருகிறார். சீக்கிரம் கொடுத்துவிடுகிறேன் எனச் சொல்லியே காலம் கடத்துகிறார்.

டெல்லி விமான நிலையத்தில் நடந்ததுபோல இன்னொரு சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர் திருச்சி திமுகவினர். 

-அருள் திலீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!