அலங்காநல்லூருக்கு இணையாக விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலக சாதனை முயற்சியாக 2000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் அவருடைய சொந்தத் தொகுதியான விராலிமலையில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இதில் 2000 காளைகளை தீரத்துடன் அடக்க 600 மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்கும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. உலக சாதனை முயற்சிக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழுவினரும் நேரில் பார்வையிடுகின்றனர்.